தேடுதல்

அறுவடை நேரம் அறுவடை நேரம் 

பூமியில் புதுமை : அழிந்து வரும் விவசாயம்

கையெழுத்து மட்டுமே போடக் கற்றவர்கள், வையத்தின் தலையெழுத்தை, வயல்வெளியில் எழுதுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

விவசாயிகள், சேற்றில் கால் வைக்காவிட்டால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை மறந்துபோனது நவீன உலகம். விவசாய விளைநிலங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறியபோது வேடிக்கை பார்த்தோம். பிளாஸ்டிக் கழிவுகளை, பூமியெங்கும் நிறைத்து, மழை நீர் நிலத்தில் சேரவிடாமல் தடுத்து, நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைத்தோம்.

'கையெழுத்து மட்டுமே போடக் கற்றவர்கள் வையத்தின் தலையெழுத்தை வயல்வெளியில் எழுதுகின்றனர்' என்று கூறுவார், கவிஞர் மு.மேத்தா. அத்தகைய விவசாயிகளின் பெருமையை, இன்றைய மாணவர் உலகம் அறியச் செய்வது, ஆசிரியர்களின் தலையாயக் கடமையாகும்.

பொறியியல், மருத்துவம், கணிப்பொறி ஆகியவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்களிடம், விவசாயக் கல்லூரிகளும் நாட்டில் உள்ளன, அறிவியல் முறைப்படி விவசாயம் செய்து நன்முறையில் நாட்டையும் வீட்டையும் காப்பாற்ற இயலும் என்பதை அறியச் செய்வோம் (SIVANDA வலைத்தளத்திலிருந்து...).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2019, 15:48