போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாடு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாடு 

ஏமன் நாட்டில் போர் நிறுத்தப்படுவதற்கு உதவ...

விடுதலை மற்றும் சனநாயகம் குறித்து தொடர்ந்து பேசிவரும் ஒரு நாடு, மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருவது முரண்பாடாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஏமன் நாட்டில் போர் நிறுத்தப்படுவதற்கு உதவ, இங்கிலாந்து பிரதமர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவரை வலியுறுத்த வேண்டும் என, ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான குழு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே அவர்களை சந்திக்கும்போது, ஏமனில் போர் நிறுத்தத்திற்கும், ஈரானில் போர் தவிர்க்கப்படுவதற்கும் உதவ வேண்டும் என, அவரை வலியுறுத்துமாறு CAAT எனும், ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான குழு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமனில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்திவரும் சவுதி அரேபியா பயன்படுத்திய ஆயுதங்களுள் பெரும்பான்மையானவை, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும், பிரிட்டனில் இருந்தும் வாங்கப்பட்டவை எனக் கூறும் CAAT அமைப்பு, விடுதலை மற்றும் சனநாயகம் குறித்து தொடர்ந்து பேசிவரும் அமெரிக்க ஐக்கிய நாடு, மனித உரிமைகளை மீறும் நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கி வருவது முரண்பாடாக உள்ளது என தெரிவித்துள்ளது.

உலகில் நடத்தப்படும் மொத்த ஆயுத விற்பனையில், மூன்றில் ஒரு பகுதி அமெரிக்காவைச் சேர்ந்தது எனக் குற்றஞ்சாட்டுகிறது, ஆயுத விற்பனைக்கு எதிரான இந்த அமைப்பு.

ஏமன் நாட்டின் மிகப் பெரும் மனிதாபிமான நெருக்கடிகள் களையப்படவும், ஈரானுடன் போரைத் தவிர்க்குமாறும் அமெரிக்க ஐக்கிய நாட்டை வலியுறுத்துமாறு, CAAT அமைப்பு இங்கிலாந்து பிரதமருக்கு விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2019, 14:50