தேடுதல்

உடல்நலத்திற்கு சைக்கிள் பயணங்கள் உடல்நலத்திற்கு சைக்கிள் பயணங்கள் 

பூமியில் புதுமை:சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, சைக்கிள் பயணங்கள்

“சைக்கிள் பேரரசு”என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட சீனாவின் நவீன வளர்ச்சியால், கடந்த 40க்கும் அதிகமான ஆண்டுகளில், சைக்கிள் பயணங்கள் குறைந்து, நகரங்கள் காற்று மாசுகேட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகைகளால் ஏற்படும் காற்று மாசுகேடு, ஓசோன் வாயுப் படலத்தை மட்டுமல்ல, மனிதரின் நுரையீரல்களையும், சுவாச அமைப்பையும் பாதித்து, அவை தொடர்புடைய, நோய்களுக்கும் காரணமாகியுள்ளது. இதனால் நகரங்களில் மோட்டார் வாகனங்களில் பயணம் மேற்கொள்வதை கூடுமானவரை தவிர்த்து, இரண்டு சக்கர மிதிவண்டியில் பயணம் செய்தால், பூமிக்கோளத்தின் அனைத்து உயிரினங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு ஒரு சிறந்த வழியாக அமையும். சைக்கிள் பயணம், சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், மனிதரின் ஒருங்கிணைந்த நலவாழ்வை மேம்படுத்தும். மக்களின் சமூக, பொருளாதாரதார வாழ்வு மேம்படவும் இப்பயணமுறை உதவும். சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் உலக நாளான ஜூன் 3ம் தேதியன்று செய்தி வெளியிட்டிருந்த ஐ.நா. நிறுவனம், நகரங்களில் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்திற்கு, வாகனங்கள் மூன்றாவது காரணம் என்றும், நகரங்களில் இடம்பெறும் பயணங்களில் பத்து விழுக்காடு சைக்கிள் பயணங்களாக இருந்தால், அவ்விடங்களில், கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றம் ஏழு விழுக்காடு குறையும் என்றும் கூறியுள்ளது. 1254ம் ஆண்டில் பிறந்த, இத்தாலிய நாடுகாண் பயணி மார்க்கோ போலோ அவர்களால், “உலகில் அற்புதமான மற்றும் மிகச் சிறந்த நகரம்” என அழைக்கப்பட்ட, கிழக்கு சீனாவிலுள்ள Hangzhou நகரம் தற்போது, காற்று மாசுபாட்டால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்நகர நிர்வாகம், சைக்கிள்கள் செல்வதற்கென புதுப் பாதைகளை அமைத்து, ஏறத்தாழ 86 ஆயிரம் கைக்கிள்களை மக்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2019, 15:21