கடலோரத்தில் ஒதுங்கியிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கடலோரத்தில் ஒதுங்கியிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் 

பூமியில் புதுமை : குடிக்க ஒரு வாய் தண்ணீர்கூட இலவசமில்லை

ஒரு பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்வதில் தண்ணீரைவிட, பிளாஸ்டிக் பாட்டில், மூடி, லேபிள், போக்குவரத்து, விளம்பரம் போன்றவைகளுக்கே அதிக அளவு செலவிடப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கோடைக் காலத்தில் இருக்கிறோம். உடல் வெப்பத்தையும், தண்ணீர் தாகத்தையும் தணித்துக் கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். தண்ணீரை யாராவது விற்பார்களா என்று கேட்டுக்கொண்டிருந்த காலம் போய், தண்ணீர் வர்த்தகம், மிகப் பெரிய அளவில், கோலோச்சிக் கொண்டிருக்கும் காலம் இது. தண்ணீர், இன்றைக்கு, இலவசமில்லை. எவ்வளவு அவசரமென்றாலும், ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரை, 10 முதல் 20 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். உலகில், தூய்மையின் அடையாளமாகக் கருதப்படும் தண்ணீரை, மாசுபட்டதாக மாற்றிய தொழிற்சாலைகள்தான், இன்று, சுத்தமான தண்ணீர் என்பதையே, ஒரு விற்பனைப் பொருளாக்கிவிட்டன.

பாட்டில் குடிநீரைக் குடிப்பதால், பிளாஸ்டிக் குப்பை கோடிக்கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாங்கப்படும் ஐந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் ஒன்று மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்கிறது. இந்தியாவிலோ 100 பிளாஸ்டிக் பாட்டில்களுள், 5, மறுசுழற்சிக்குச் செல்வதே ஆச்சரியம்தான். ஒரு பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்வதில், தண்ணீரைவிட, பிளாஸ்டிக் பாட்டில், மூடி, லேபிள், போக்குவரத்து, மயக்கும் விளம்பரம் போன்றவைகளுக்கே அதிக அளவு செலவிடப்படுகிறது.

பாட்டில் குடிநீர் விற்பனையில், உலக அளவில், இந்தியா, 10-வது இடத்தில் உள்ளது. நாம் வாங்கும் ஒவ்வொரு குடிநீர் பாட்டிலும், உலகின் வளத்தைச் சுரண்டி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவு உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு என்ன தீர்வு என்பதை, நாம் அனைவரும் சிந்திக்க, கடமைப்பட்டுள்ளோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2019, 14:20