மரத்தை தேடி மழை வரும் மரத்தை தேடி மழை வரும் 

பூமியில் புதுமை : மரமா...! மக்கள் பிரதிநிதியா...!

'ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தபின் ஒரு மரம் நடுங்கள்...! 5 ஆண்டுகளுக்கு பிறகு யார் நமக்கு அதிகமான பலன் கொடுத்தது என்று பாருங்கள்..! மரமா... மக்கள் பிரதிநிதியா...!’ என்பது தெரியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஓட்டுப்பதிவை மையப்படுத்தி மரம் வளர்ப்பிற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் ‘5 ஆண்டு சவால்’ என பரவி வருகிறது.

தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. கட்சித் தலைவர்களின் முரணான நிலைப்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் பழைய பேட்டிகளின் காணொளிகள் அதிகளவில் பகிரப்படுகின்றன. 'மீம்ஸ்'கள், சிரிப்புடன் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இயற்கை ஆர்வலர்கள், மரம் வளர்க்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். அதில், 'ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தபின் ஒரு மரம் நடுங்கள்...! 5 ஆண்டுகளுக்கு பிறகு யார் நமக்கு அதிகமான பலன் கொடுத்தது என்று பாருங்கள்..! மரமா... மக்கள் பிரதிநிதியா...!’, என்ற கூற்று அதிகம் பரப்பப்படுகிறது.

தற்போது நிலவும் வெயிலின் கொடுமையை குறைக்கவும், பொதுவாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வீடுதோறும் மரம் வளர்க்கும்படி கூறும் இந்த ‘5 ஆண்டு சவால்’ கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2019, 10:53