தேடுதல்

Vatican News
ஜப்பானில் புயலால் சாய்ந்த ஒரு மரம் ஜப்பானில் புயலால் சாய்ந்த ஒரு மரம்  

பூமியில் புதுமை : மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்

புயலினால் மண்ணில் சாய்ந்த மரம், மீண்டும் துளிர்விடும் என்ற உறுதியுடன், அம்மரத்தை தூக்கி நட்ட கிராம மக்களின் நம்பிக்கை, அம்மரத்திற்கு உயிரைத் தந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், அம்மாவட்டத்தின் மறமடக்கி அருகே உள்ள கரிசக்காடு கிராமத்தின் மையப்பகுதியில், 150 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று தரையில் சாய்ந்தது. இத்தனை ஆண்டு காலம், ஒரு குறுங்காடு போல காட்சியளித்து, கிராமத்து மக்களுக்கு நிழலைக் கொடுத்து வந்த அந்த மரம், கஜா புயலினால் மண்ணில் சாய்ந்து மக்களுக்கு மன வேதனை அளித்ததைத் தொடர்ந்து, அம்மரத்தை தூக்கிநட முடிவு செய்தனர், கிராமத்து இளையோர். மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்திவிட்டு ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியோடு, மீண்டும் அம்மரத்தை, அதே இடத்தில் நிமிர்த்தி நட்டனர். பின்பு, கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மரத்திற்கு தண்ணீர் ஊற்றினர். அந்த மரம் மீண்டும் துளிர்விட்டுவிடும் என்று கிராம மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையே, அந்த மரத்திற்கு உயிரைத் தந்தது. கரிசக்காடு கிராமத்து இளைஞர்களின் செயல் பாராட்டிற்குரியது. (ஆதாரம்: புதிய தலைமுறை)

17 May 2019, 15:24