தேடுதல்

Vatican News
MSF எனப்படும் எல்லைகளற்ற மருத்துவர் குழு உதவிகள் செய்யும் முகாம் MSF எனப்படும் எல்லைகளற்ற மருத்துவர் குழு உதவிகள் செய்யும் முகாம்  (ANSA)

லிபியா நாட்டு மோதல்களில் சிக்கியுள்ள மக்களின் அவலம்

திரிப்போலியில் தற்போது இடம்பெற்றுவரும் மோதல்களால், முகாம்களில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் உட்பட, பல ஆயிரக்கணக்கான மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் - MSF

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

லிபியா நாட்டின் தலைநகர் திரிப்போலியில் தற்போது இடம்பெற்றுவரும் மோதல்களால், முகாம்களில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் உட்பட, பல ஆயிரக்கணக்கான மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, Médecins Sans Frontières (MSF) என்றறியப்படும் எல்லைகளற்ற மருத்துவர் என்ற பிறரன்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிலிருந்து பல்லாயிரம் மக்கள் நகரின் வேறு பகுதிகளுக்குத் தப்பிச் சென்றுள்ளச் சூழலில், முகாம்களில் வாழும் புலம்பெயர்ந்தோர் எங்கும் செல்ல இயலாமல் தவிப்பதாக, MSF அமைப்பு அறிவித்துள்ளது.

திரிப்போலியில் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால், முகாம்களில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவோ, அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லவோ இயலாத நிலையில் பிறரன்பு அமைப்புக்கள் இருப்பதாகக் கூறிய MSF அமைப்பைச் சேர்ந்தவர்கள், புலம்பெயர்ந்த மக்களில் பலர், ஆயுத குழுக்களுக்கு உதவுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளனர்.

திரிப்போலியில், கடந்த 7 மாதங்களில் மூன்றாவது முறையாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

09 April 2019, 16:19