தேடுதல்

Vatican News
வறண்ட நதிக்கரையில் இந்திய விவசாயிகள் வறண்ட நதிக்கரையில் இந்திய விவசாயிகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : விவசாயிகளே, தலை நிமிர்ந்து நில்லுங்கள்

விவசாயத்துக்காக ஒரு தடவைகூட கடன் வாங்காத வெற்றிகரமான விவசாயி புட்டையா, மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைக்கும் பெருமை பெற்றவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மைசூரு, ஹெக்காடாதேவனா பகுதியைச் சேர்ந்த 70 வயதான புட்டையா அவர்கள், தன்னுடைய வெற்றிக்குப் பின்னால், தினசரி, வார, மாத, மூன்று மாத, ஆறு மாத மற்றும் ஆண்டு வருமானம் உள்ளடங்கி இருக்கிறது, என்கிறார். ஒவ்வொரு நாளும், பால் விற்பனை வழியாகவும், வாரம் ஒரு முறை, காய்கறிகள் விற்பனை வழியாகவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தேங்காய் வழியாகவும் வருமானம் ஈட்டுகிறேன். ஆறு மாதத்துக்கு ஒரு முறை, பருப்பு வகைகள் வழியாகவும், ஆண்டுக்கு ஒரு முறை, கரும்பு, மஞ்சள் மற்றும் இதர பயிர்கள் வழியாகவும் வருமானம் வருகிறது. இவற்றின் வழியாக, எனது குடும்பத்துக்கு நிலையான, சீரான வருமானத்தை என்னால் சம்பாதிக்க முடிகிறது. இவற்றோடு, செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறேன். அவற்றின் வழியாக ஆண்டுதோறும் 5 முதல் 6 இலட்சம் வரை வருமானம் கிடைக்கிறது" என்கிறார். புட்டையா அவர்கள், இதுவரை, விவசாயத்துக்காக, ஒரு தடவைகூட கடன் வாங்கியதில்லை என்பது வியக்கத்தக்கதொரு விடயம்.

குத்தகை விவசாயி ஒருவரின் மகனான புட்டையா, வெற்றிகரமான விவசாயியாக மாறி, 2015ல் மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைக்கும் பெருமை பெற்றார்.

12 April 2019, 15:05