நல்ல அறுவடையை கொண்டாடும் விழா நல்ல அறுவடையை கொண்டாடும் விழா 

பூமியில் புதுமை : சிக்கிமின் ‘‘100% இயற்கை விவசாயம்”

முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கும் சிக்கிம் மாநில அரசின் முயற்சியால் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதுடன், சுற்றுலாவும் விரிவடைந்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது சிக்கிம் மாநிலம். இம்மாநில மக்கள் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்து வருகின்றனர். அம்மாநில முதல்வரின் முயற்சியால், நவீன முறை விவசாயத்திற்கு மாற்றாக, பாரம்பரிய விவசாய முறையை கடைபிடித்து வருகின்றனர். கடந்த நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் அம்மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிக்கிம் மாநில அரசின் முயற்சியால், 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதுடன், சுற்றுலாவும் விரிவடைந்துள்ளது. வீடுகளில் காய்கறி சாகுபடி செய்ய தேவையான இடுபொருட்கள் வீட்டுத் தோட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 14 கூட்டுறவு வங்கிகள் வழியாக கடன் வழங்கப்படுகிறது.

இச்சாதனையைப் பாராட்டி, சிக்கிம் மாநில அரசின் முதலமைச்சர், பவன் குமார் சம்லிங் அவர்களுக்கு, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO, “எதிர்கால திட்ட தங்க விருதை” (Future Policy Gold Award) கடந்த ஆண்டு வழங்கியது.  இந்த விருதுக்கு 51 நாடுகள் போட்டியிட்டன. உலகின் முதல் இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம், இந்த விருதைப் பெற்றுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2019, 13:47