தேடுதல்

Vatican News
சீனாவில் மதம் சீனாவில் மதம்  (AFP or licensors)

சீனாவில் மத உரிமை மதிக்கப்படுவதில்லை

மதத்தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் சீன அரசின் போக்கை கண்டிக்கும் அமெரிக்கா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சீனாவில் மத சுதந்திரம் மதிக்கப்படுவதில்லை என, உலகில் மத விடுதலைக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதர் வெளியிட்ட கருத்துக்கு தன் மறுப்பை வெளியிட்டுள்ளது சீன அரசு.

சீனாவில் மத உரிமை மதிக்கப்படுவதில்லை என ஹாங்காங் கருத்தரங்கு ஒன்றில் அமெரிக்க தூதர் Sam Brownback அவர்கள் கூறியது, உண்மைக்கு புறம்பான செய்தி என குற்றஞ்சாட்டியுள்ள  சீன அமைச்சகத்தின் வெளியுறவுத் துறை அலுவலகம், அமெரிக்க தூதரின் கூற்று, முன்சார்பு எண்ணங்களையும், விரோத மனப்பான்மைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது என தெரிவித்துள்ளது.

சீனாவில், திபெத்தியர்கள் உட்பட, அனைத்து இனம், மற்றும், மதங்களைச் சார்ந்த மக்கள், முழு மத சுதந்திரத்தை அனுபவிப்பதாக உரைக்கிறது, சீன அமைச்சகத்தின் அறிக்கை.

மதத்தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் சீன அரசின் போக்கையும் தன் உரையில் அமெரிக்க தூதர் Brownback அவர்கள் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

11 March 2019, 15:50