தேடுதல்

Vatican News
பாரம்பரிய விவசாய வழிகள் பாரம்பரிய விவசாய வழிகள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : தலைமையாசிரியரின் இயற்கை விவசாயம்

நாட்டுப் பசுக்களை வாங்கி, அவற்றின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சேகரித்து, குறிப்பிட்ட இலை தழைகளைச் சேர்த்து தாமே பூச்சிவிரட்டிகளையும் தயாரிக்கும் இயற்கை விவசாயி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் அவர்கள், தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றபின், தமக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இயற்கையான முறையில் விவசாயம் செய்யத் துவங்கினார். பாரம்பரிய நெல் விதையான ஆத்தூர் கிச்சலி சம்பா, பூங்கா, அறுபதாம் குறுவை ஆகியவற்றை வாங்கி வந்து, இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களை இட்டு சாகுபடி செய்தார். மேலும், பயிருக்கு இயற்கை உரங்களான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், நுண் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை தெளித்து, அறுவடை செய்தார். ஒவ்வொரு முறையும் பூச்சி விரட்டிகளை வாங்கும் செலவைத் தவிர்க்கும் நோக்கத்தில், நாட்டுப் பசுக்களின் சாணம், கோமியம் உள்ளிட்டவற்றை சேகரித்து, குறிப்பிட்ட இலை தழைகளைச் சேர்த்து, இயற்கை பூச்சிவிரட்டிகளையும் அவரே தயாரித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் பாரம்பரிய விதைநெல் இரகங்களை வாங்கி வந்து பயிரிட்டுள்ளதாகக் கூறும் வாசுதேவன் அவர்கள், ஒவ்வொரு முறையும் புதியவகை நெல் இரகங்களை பயிரிட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். இதற்காக, இயற்கை விவசாயம் குறித்த ஏராளமான புத்தகங்களை வாங்கி, குறிப்புகள் எடுப்பது அவர் வழக்கம். ( பசுமை தமிழகம்)

15 February 2019, 14:04