தேடுதல்

Vatican News
வெனிசுவேலா மருத்துவமனையில் நோயுற்று படுத்திருக்கும் குழந்தை வெனிசுவேலா மருத்துவமனையில் நோயுற்று படுத்திருக்கும் குழந்தை  (AFP or licensors)

சிறார்பருவ புற்றுநோயை ஒழிக்க நடவடிக்கை

புற்றுநோயாளர்களில் எண்பது விழுக்காட்டினர், அதிக வருவாய் உள்ள நாடுகளிலும், ஏறக்குறைய இருபது விழுக்காட்டினர், வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளிலும் குணம் பெறுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், 15 வயதுக்குட்பட்ட, ஏறக்குறைய 2 இலட்சத்து 15 ஆயிரம் சிறார் புற்றுநோயால் தாக்கப்படுகின்றனர் என்றும், இவர்களில் ஏறக்குறைய 85 ஆயிரம் பேர், 15க்கும், 19 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் புற்றுநோய் பிரிவு கூறியுள்ளது.

சிறார்பருவ புற்றுநோய் உலக நாள், பிப்ரவரி 15ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட, உலகளாவிய புற்றுநோய் ஆய்வு அமைப்பு (IARC), அதிக வருவாய் உள்ள நாடுகளில் குணமடையும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையில், நான்கில் ஒரு பகுதியினரே, வருவாய் குறைந்த நாடுகளில் குணம் பெறுகின்றனர் என எச்சரித்துள்ளது.

சரியான மற்றும் தக்க சமயத்தில் அளிக்கப்படும் சிகிச்சை, சிறாரின் வாழ்வு பாதுகாக்கப்பட உதவும் எனவும், பல இளையோர், தாங்கள் வாழ்கின்ற நாடுகளில், சரியான சிகிச்சை பெறுவதில்லை எனவும் அவ்வறிக்கை எச்சரித்துள்ளது.

வயதுவந்தோரைவிட, சிறாரே பல்வேறு விதமான புற்றுநோய்களால் தாக்கப்படுகின்றனர் என்றும், இரத்த அணுக்கள் தொடர்புடைய புற்றுநோய்களே, சிறார் பருவத்தில் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. (UN)

19 February 2019, 15:23