தேடுதல்

Vatican News
நோய்களை பரப்பும் கொசுக்கள் நோய்களை பரப்பும் கொசுக்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : நம் முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம்

தவளைகளையும், தட்டான் பூச்சிகளையும் நம் முன்னோர்கள் வளர்க்கவில்லை. ஆனால் அதேவேளை, அவை அழிவதற்கும் அவர்கள் காரணமாகவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிகைக்காய், அரப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்மைக் குளிக்கச் சொன்னது, கூந்தல் வளர்வதற்கு அல்ல, மாறாக, கொசுவை ஒழிக்க. முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம் இது.

ஒரு மனிதர் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தார்  என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்குப் பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும்போது, தண்ணீர் முழுவதும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க, வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால், தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து, சோப்பு அழுக்கை உண்ணும். சிகைக்காய்  போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கும்போதும், அந்த அழுக்கை உண்ண, மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ, இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில், சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன. ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை, அந்தத் தவளைகள் உண்டு, மனிதனை, காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின. ஒரு தட்டான்பூச்சி, நாள் ஒன்றுக்கு, ஆயிரம் கொசு முட்டைகளைத் தின்றுவிடும். இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை. அதனால்தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது. முடிந்தவரை  இயற்கையான பொருட்களை பயன்படுத்தி, இயற்கையையும், நம்மையும் காப்போம். இன்றைய  மனிதன், இயற்கையை மறந்து, செயற்கைக்கு மாறி, துன்பங்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம். (அமுதம் நியூஸ்)

18 January 2019, 14:46