இரு கொரிய நாடுகளின் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் ரிபன்கள் இரு கொரிய நாடுகளின் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் ரிபன்கள் 

சமாதான முயற்சிகளில் இரு கொரிய நாடுகள்

2018ம் ஆண்டில், வட மற்றும் தென் கொரிய நாடுகள், போர் என்ற ஆபத்திலிருந்து தப்பித்தன - வட கொரிய அரசுத்தலைவர் கிம் ஜோங்-உன் அவர்களின் மடல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2018ம் ஆண்டில், வட மற்றும் தென் கொரிய நாடுகள், போர் என்ற ஆபத்திலிருந்து தப்பித்தன என்றும், தற்போது உருவாகியுள்ள உறவு, முன்னோக்கிச் செல்லுமே தவிர, பின்னோக்கிச் செல்லாது என்றும், வட கொரிய அரசுத்தலைவர் கிம் ஜோங்-உன் அவர்கள், தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜே-இன் அவர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலும், அதேவேளை, வட கொரியாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையிலும் உருவாகியுள்ள சமாதான முயற்சிகள், முன்னேறிச் செல்லவேண்டும் என்பதில் இரு தலைவர்களும் தீவிர ஆர்வம் கொண்டுள்ளனர் என்று தென் கொரிய அரசுத் தலைவர் மூன் ஜே-இன் அவர்கள் கூறியதாக ஆசிய செய்தி கூறியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வட கொரியத் தலைநகர் Pyongyangல் இரு நாட்டுத் தலைவர்களும் மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பைத் தொடர்ந்து, இவ்வாண்டு டிசம்பர் மாதம், தென் கொரிய தலைநகர் Seoulல் அடுத்த சந்திப்பு நிகழ வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இவ்விரு தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, இவ்விரு நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Panmunjom என்ற ஊரில் புதைக்கப்பட்டிருந்த பல்லாயிரம் நிலத்தடி கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2019, 15:13