தேடுதல்

Vatican News
தேனீக்கள் தேனீக்கள் 

பூமியில் புதுமை : தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு

ஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் தேனீக்களின் அயராத மகரந்தச் சேர்க்கைப் பணியின் விளைவால் கிடைக்கும் பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகம் முழுவதும் தாவரங்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கையில் எண்பது விழுக்காட்டுக்குப் பொறுப்பு காட்டுத் தேனீக்களும், வளர்ப்புத் தேனீக்களும்தான். தேனீக்களில் ஒரு இனம், ஒரு நாளில் முப்பது கோடி பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு உணவு தரும் பயிர்களில் நூற்றுக்கு எழுபது பயிர்களில் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இந்தப் பயிர்கள்தான் உலகின் ஊட்டச்சத்து தேவையில் தொண்ணூறு விழுக்காட்டைப் பூர்த்திசெய்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் தேனீக்களின் அயராத மகரந்தச் சேர்க்கைப் பணியின் விளைவால் கிடைக்கும் பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஏறத்தாழ இருபது இலட்சம் கோடி ரூபாய்!. இது உணவு விளைபொருளின் மதிப்புதான். இந்த உணவுகளெல்லாம் புவியின் பெரும்பாலான உயிர்களுக்குக் கொடுக்கும் ஆற்றலையும், அதனால் காக்கப்படும் இயற்கைச் சமநிலையையும் மதிப்பிடவே முடியாது.

ஆனால், 1990-களிலிருந்து தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. இதற்கு, கைபேசிக் கோபுரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் போன்றவையே காரணங்கள் என்று சொல்லப்படுகின்றன. கூடவே, காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல் போன்றவையும் சேர்ந்துகொள்கின்றன. எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா, உலகை ஆள்வதாகச் சொல்லிக்கொள்ளும் மனித இனமான நாம்தான்.

ஆக, இயற்கையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதாவது மனிதர்களான நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், தேனீக்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஓர் இயற்கைச் சூழலினுடைய ஆரோக்கியத்தின் மிகவும் பொருத்தமான அடையாளம் தேனீக்களே. தேனீக்களுக்கு ஏற்படும் எந்தப் பாதிப்பும் நம் சூழலுக்கும், நமக்கும் ஏற்படும் பாதிப்பே. இதைச் சொல்வது, உலகின் மிகப்பெரும் அறிவியலாளர்கள்

16 January 2019, 14:58