தேடுதல்

நீர்நிலைகளின் சுத்தம் காப்போம் நீர்நிலைகளின் சுத்தம் காப்போம் 

பூமியில் புதுமை : பசுமை இயக்கத்தின், வாரம் ஒரு குளம்!

கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, கோவை மாவட்டத்தில் வாரம் ஒரு குளத்தை தூர் வாரி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கோவை மாவட்டத்தின் குனியமுத்தூர் பகுதியில் உள்ள செங்குளத்தில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் குவிந்திருந்தன. இதனை அகற்றும் நோக்கத்துடன் 2017ம் ஆண்டு, மே மாதம், ‘கோவை குளங்கள் பாதுகாப்பு’ இயக்கம் எடுத்த முயற்சியால், காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற களப்பணியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, குளத்தைச் சுத்தம் செய்தனர்.

வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, கோவையில் உள்ள குளங்களைச் சுத்தம் செய்யும் பணியில், தன்னார்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து, இந்த தூய்மைப் பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்கிறார், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்.

மேலும், மண் திட்டுக்களினால் குளத்தில் நீர்வரத்து குறைகிறது. எனவே, இந்த களப்பணியில், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளும் இந்த பணிக்கு நிதிகள் ஒதுக்கி உதவவேண்டும் என்கிறார், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் காட்டிவரும் மணிகண்டன்.

மக்கள் ஒன்றிணைந்து ஆர்வம் காட்டினால், இயற்கையை அழிவிலிருந்து காக்க முடியும் என்பதை நிருபித்து வருகின்றனர், இந்த இயக்கத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2019, 14:58