நடப்படவுள்ள மரக்கன்றுகள் நடப்படவுள்ள மரக்கன்றுகள் 

பூமியில் புதுமை : சுற்றுச்சூழலும் உலக அமைதியும்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் வழியாக உலகின் அமைதிக்கு வித்திடமுடியும் என்று நம்பி செயல்பட்டவருக்கு கிடைத்தது, நொபெல் அமைதி விருது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆப்பிரிக்க கண்டத்தின் கென்யாவைச் சேர்ந்த பெண்மணி வங்கரி மாதாய் அவர்கள், 2004ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதினைப் பெற்றார். எங்கு அமைதியை ஏற்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது? சூழல் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சி, நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்குரிய நம் தகுதியைச் சார்ந்துள்ளது என்ற உறுதியான நம்பிக்கை, ஆப்ரிக்கா முழுவதும் மரங்கள் நடுவதில் காட்டிய ஆர்வம், போன்றவைகளுக்காக இவருக்கு இந்த அமைதி விருது வழங்கப்பட்டது.

குடியரசு, மற்றும், அமைதி போன்றவற்றிற்கு ஆற்றிய சேவைக்காக இவர் இவ்விருதினைப் பெற்றார். இவர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் வழியாகவே உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு, பசுமைச் சங்கிலி என்ற இயக்கத்தின் வழியாக, ஆப்ரிக்கா முழுவதும் 2 கோடி மரங்கள் நடப்பட உதவியுள்ளார். அதேவேளை, இவர் கூறினார், 'மரங்களை நட்டுவிட்டுச் செல்வது மட்டும் எங்கள் பணியல்ல, மாறாக, இயற்கை குறித்த ஆர்வத்தை மக்களில் ஏற்படுத்தி, தங்கள் சுற்றுச்சூழலை அவர்கள் பாதுகாப்பதன் வழியாகவே, அவர்களின் வாழ்வையும் வருங்காலத்தையும் பாதுகாக்கமுடியும் என்ற உணர்வை அவர்களில் உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது' என்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2019, 15:28