தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியராக... தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியராக... 

இமயமாகும் இளமை – கால் கொண்டு அறிவொளி ஏற்றி...

தன் இரு கரங்களும் வளர்ச்சியடையாத நிலையில், 30 வயதான இளம்பெண் பசந்தி குமாரி அவர்கள், தன் கால்களைக் கொண்டு, கரும்பலகையில் எழுதி, பல குழந்தைகளுக்கு அறிவொளி ஏற்றி வருகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தன் இரு கரங்களும் வளர்ச்சியடையாத நிலையில், 30 வயதான இளம்பெண் பசந்தி குமாரி (Basanti Kumari) அவர்கள், தன் கால்களைக் கொண்டு, கரும்பலகையில் எழுதி, பல குழந்தைகளுக்கு அறிவொளி ஏற்றி வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஓர் எளியக் குடும்பத்தில், இரு கரங்களின்றி பிறந்த பசந்தியை, அவரது பெற்றோர், பள்ளிக்கு அனுப்பவில்லை.

இருப்பினும், தன் சொந்த முயற்சியால் பள்ளியில் சேர்ந்து, 1993ம் ஆண்டு பள்ளிப்படிப்பையும், 1999ம் ஆண்டு, பட்டப்படிப்பையும் நிறைவு செய்த பசந்தி அவர்கள், பின்னர், ஆசிரியர் பயிற்சியில் இணைந்தார். இந்தப் பயிற்சியை நிறைவு செய்தபின்னர், பல்வேறு பள்ளிகளில் வேலைக்கு மனு அளித்தும், அவரது நிலையைக் கண்டு, ஒருவரும் அவருக்கு வேலை தரவில்லை. அவரது விடா முயற்சியால், 2005ம் ஆண்டு, ரோராபந்த் கார்மிக் (Rorabandh Karmik) நடுநிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார்.

தன் கால்களைக் கொண்டு கரும்பலகையில் எழுதி, அவர் பாடம் சொல்லித்தருகிறார். தனது அங்கக்குறைபாட்டை தன் வெற்றிக்கு உந்து சக்தியாகப் பயன்படுத்துகிறார், பசந்தி குமாரி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2018, 15:03