பெத்லகேமில் பிரான்சிஸ்கன் துறவுசபையினருக்கு உரிய துறவுமடம் பெத்லகேமில் பிரான்சிஸ்கன் துறவுசபையினருக்கு உரிய துறவுமடம் 

திருஅவை சொத்துக்கள் ஆக்ரமிப்புக்கு முஸ்லிம் குரு கண்டனம்

எருசலேம் இலத்தீன் முதுபெரும்தந்தைக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதற்கு முஸ்லிம் குரு கண்டனம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

எருசலேம் இலத்தீன் முதுபெரும்தந்தைக்குச் சொந்தமான நிலங்களை, இஸ்ரேல் இராணுவம் ஆக்ரமிப்பு செய்துள்ளதற்கு எதிராய், தனது கண்டனத்தைப் பொதுப்படையாக வெளியிட்டுள்ளார், எருசலேம் முஸ்லிம் தலைமை குரு, Sheikh Mohammad Ahmad Husayn.

இஸ்ரேலின் இந்நடவடிக்கை, பாலஸ்தீனப் பகுதியில், இஸ்ரேல் மக்களின் குடியேற்றத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இடம்பெற்றுள்ள அத்துமீறல் செயல் என்று கூறியுள்ள, முஸ்லிம் தலைமை குரு, Ahmad Husayn அவர்கள், அரசியல் தலைவர்கள் இதில் தலையிட்டு, திருஅவை சொத்துக்கள் ஆக்ரமிப்பு செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

புனித பூமி குறித்த உலகளாவிய சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், Ahmad Husayn அவர்கள், வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இஸ்ரேலின் ஆக்ரமிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீன கழகங்களும், ஊடகமும், இது, உலகளாவிய சட்டத்தை மீறுவதாக உள்ளது எனக் கூறியுள்ளன.

எருசலேம் இலத்தீன் முதுபெரும்தந்தைக்குச் சொந்தமான அறுபது ஏக்கர் நிலப்பகுதி இஸ்ரேல் அரசால் ஆக்ரமிக்கப்பட்டு, இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது என, பீதேஸ் செய்தி கூறுகின்றது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2018, 15:02