தேடுதல்

COP24 காலநிலைமாற்றம் உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலரின் துவக்க உரை COP24 காலநிலைமாற்றம் உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலரின் துவக்க உரை 

உலகத் தலைவர்களிடம் ஐ.நா. விரும்பும் நான்கு காரியங்கள்

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது, நாடுகள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முக்கியமானது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றம் (Cop24) குறித்து, போலந்து நாட்டின் Katowice நகரில் தொடங்கியுள்ள உலக உச்சி மாநாட்டில் உரையாற்றிய, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், உலகத் தலைவர்களிடமிருந்து நான்கு காரியங்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்கின்ற, 150க்கும் அதிகமான உலகத் தலைவர்களிடம்  இவ்வாறு கூறிய கூட்டேரெஸ் அவர்கள், நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தைப் பாதுகாப்பதற்கு, அதிகமான செயல்பாடுகளும், ஆர்வமும் அவசியம், அதிகமான நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும், உறுதியான திட்டங்கள் வழியாக, காலநிலை மாற்றங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்

2015ம் ஆண்டில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 197 நாடுகள், அதனை அமல்படுத்துவதற்கும், உலகளாவிய வெப்பநிலையை 2 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகாமல் இருப்பதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கும், இம்மாநாட்டில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

Katowice நகரில் நடைபெற்றுவரும் உலக உச்சி மாநாடு, டிசம்பர் 14ம் தேதி நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2018, 15:14