இலங்கை உச்ச நீதிமன்றம் இலங்கை உச்ச நீதிமன்றம் 

இலங்கையில் சனநாயகம் மதிக்கப்படுமாறு வலியுறுத்தல்

அரசுத்தலைவரும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியலமைப்பை மீறியவேளை, இதற்கு எதிராய் குரல் எழுப்ப வேண்டியது குடிமக்களின் கடமை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இலங்கை அரசுத்தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், டிசம்பர் 17, வருகிற திங்களன்று புதிய அமைச்சரவையை அமைப்பதாக அறிவித்துள்ளவேளை, நாட்டில் சனநாயகம் மதிக்கப்பட வேண்டுமென, பல்வேறு பொது மக்கள் அமைப்புகள் வலியுறுத்திள்ளன.

மனித உரிமை குழுக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர் உட்பட பலர், கறுப்பு உடையில், சனநாயக ஆதரவு விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொண்டு கொழும்பு நகரின் லிப்டன் மைதானத்தில் கூடி, சனநாயகம் காக்கப்படுமாறு கேட்டுக்கொண்டனர்.

இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த, காணாமல்போனவர் குடுமபங்கள் அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னான்டோ அவர்கள், அரசுத்தலைவரும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியலமைப்பை மீறியவேளை, இதற்கு எதிராய் குரல் எழுப்ப வேண்டியது எங்களது கடமை என்று கூறியுள்ளார். (UCAN)

இதற்கிடையே, அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தது, அரசியலமைப்புக்கு முரணானது என்று, அந்நாட்டு உச்ச நீதிமன்றம், இவ்வியாழனன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், அரசுத்தலைவர் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டியது அவசியம் எனவும், அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என, செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2018, 16:07