குடிபெயர காத்திருக்கும் மத்திய அமெரிக்க மக்கள் குடிபெயர காத்திருக்கும் மத்திய அமெரிக்க மக்கள் 

குடிபெயரும் மக்களின் குழந்தைகள் குறித்து யூனிசெஃப் கவலை

அநீதிமான சூழல்களிலிருந்து தப்பிச்செல்லும் மத்திய அமெரிக்க குழந்தைகள், தங்கள் பயணத்தின்போது, இன்னும் பல ஆபத்துக்களை சந்திக்கும் நிலை உருவாகியிருப்பது குறித்து, யூனிசெஃப் ஆழ்ந்த கவலை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மெக்சிகோ நாட்டிற்குள் நுழைந்திருக்கும் மத்திய இலத்தீன் அமெரிக்க மக்களில், 2300க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர் என்றும், இவர்களுக்கு, பாதுகாப்பு, நல பராமரிப்பு, சுத்தமான நீர் போன்ற அடிப்படைத் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும், ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஹொண்டூராஸ், எல் சால்வதோர், கவுத்தமாலா ஆகிய நாடுகளிலிருந்து புறப்பட்டு, அக்டோபர் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய மெக்சிகோ நாட்டிற்குள் நுழைந்துள்ள குடும்பங்களில், குழந்தைகளின் உடல் தேவைகளையும், மனநல தேவைகளையும் நிறைவு செய்யும் பணிகளில் யூனிசெஃப் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தங்கள் நாடுகளில் நிலவும் அநீதிமான சூழல்களிலிருந்து தப்பித்துள்ள இக்குழந்தைகள், தங்கள் பயணத்தின்போது, இன்னும் பல ஆபத்துக்களை சந்திக்கும் நிலை உருவாகியிருப்பது குறித்து, யூனிசெஃப் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

தங்கள் குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆவலில் தங்கள் நாடுகளை விட்டு புறப்பட்டுள்ள இம்மக்கள், நம்பிக்கை இழந்து போகும் நிலையில், அது, குழந்தைகளை வெகு அதிகமாகப் பாதிக்கும் என்பதையும், யூனிசெஃப் அதிகாரிகள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2018, 14:18