தேடுதல்

Vatican News
மிதி வண்டியில் பொருள்களை எடுத்துச் செல்லுதல் மிதி வண்டியில் பொருள்களை எடுத்துச் செல்லுதல்  (ANSA)

இமயமாகும் இளமை : பிழைக்கத் தெரிந்த வியாபாரி

உபதேசத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், கொஞ்சம் உதவி செய்யும் மனதையும் அதோடு இணைத்தால், இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி தரும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடிவிட்டது. வழக்கம்போல், “பாத்து போகக் கூடாதா?" "என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" என்ற இலவச உபதேசங்கள். அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.

"அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? ஏதோ என்னால் முடிந்த உதவி" என ஒரு பத்து ரூபாயை கொடுத்தார். அத்தோடு, "தம்பி, இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல, ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிக் கொள்" என்றார். மக்களும் இவரது செய்கை, பேச்சை பார்த்து பணம் தந்தார்கள். உடைந்துபோன முட்டைகளின் விலையைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். அப்போது ஒருவர் அந்த பையனிடம் "தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடுபடுவயோ?" என்றார். பையன் சிரித்துக்கொண்டே சொன்னான், "அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி” என்று. 

16 November 2018, 15:23