தேடுதல்

உரோம் புறநகர் பகுதியில் நாடோடி இனத்தவர் வாழும் பகுதி உரோம் புறநகர் பகுதியில் நாடோடி இனத்தவர் வாழும் பகுதி 

இமயமாகும் இளமை : 12 வயதில் கல்வி அருமை உணர்ந்து, கற்பிப்பிப்பவர்

தனக்கு மறுக்கப்பட்ட கல்வியால், தான் இழந்ததை உணர்ந்து, தன் சமுதாய மக்கள் கல்வி பெற உழைக்கும் 12 வயது சிறுவன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வாழ்வாதாரத்திற்காக பாசிமணிகளை விற்கவும், பிச்சை எடுக்கவும் பழக்கப்பட்டவன், 8 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தியவன், படிக்கும்போது, பள்ளியில், சக மாணவர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டவன், இன்று, தன்னுடைய சமூகத்தில், தன்னையொத்த சிறுவர், சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்கள் கல்வி கற்க உந்துதலாக இருக்கிறான். ஆம், அவன்தான், தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் சக்தி.

சக்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். சக்திக்கு உடன்பிறந்தவர்கள் 5 பேர். குடும்பச் சூழ்நிலையால், 8 வயதிலேயே அவனது படிப்பு தடைபட்டது. 2014ம் ஆண்டு, அவனது வாழ்க்கையில், மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கிய ஆண்டு. ‘அனைவருக்கும் கல்வி’திட்டத்தின் கீழ் Hand-in-Hand என்ற அரசு சாரா நிறுவனம், திருவண்ணாமலையில் வாழும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. முதலில், சக்தியை மட்டும், அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்ப, அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். தான் பள்ளியில் கற்றதை, தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுத்தான், சக்தி. பின், நரிக்குறவர் சமுதாயத்தினர், பெண் பிள்ளைகளையும், மெல்ல, மெல்ல, பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர். சக்தியின் தூண்டுதலால், நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஏறத்தாழ 25 குழந்தைகள், மறு ஆண்டுமுதல், பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2018, 14:57