தேடுதல்

இந்திய பாரம்பரிய உடைகளுடன்...... இந்திய பாரம்பரிய உடைகளுடன்...... 

இமயமாகும் இளமை : இந்திய கைத்தறி துறையை பாதுகாத்த பெண்மணி

இலண்டனில் கல்வி பயின்று கொண்டிருந்தவர், மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர இந்தியாவில் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இலண்டனில் கல்வி பயின்றுகொண்டிருந்த கமலா தேவி என்பவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார். இந்தியா சுதந்திரமடைந்தபின், பெண்கள் நலனில் அக்கறைகொண்டு பணியாற்றத் தொடங்கினார். இந்தியாவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் கமலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது. கலை மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய பாரம்பரிய கைத்தறி துறையை பாதுகாப்பதிலும், அதனைப் புதுப்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1955ம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும், 1987ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும், கமலா தேவி சட்டோபாத்யாய் அவர்கள் பெற்றார். இவர், தன் 85ம் வயதில், 1988ம் ஆண்டு, அக்டோபர் 29ம் தேதி காலமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2018, 15:13