இளம் சிசுக்கள் இளம் சிசுக்கள் 

இமயமாகும் இளமை......... : குழந்தைகளையும் பெற்றோரையும் ஒன்று சேர

மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தத்துகொடுக்கப்பட்டதால், அந்த வலி உணர்ந்து, தற்போது, தத்து கொடுத்தோரிடையே உழைக்கும் இலங்கை பெண்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1980களில் 3 மாதக் குழந்தையாக இருந்தபோது, இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கடத்தப்பட்டவர் சாரா.  தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு ஆறு மாதமாவது நிரம்பியிருக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தபோதும், முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பெண் குழந்தை சாரா, இன்று, திருமணம் முடித்து, மூன்று குழந்தைகளுக்கு தாயானபின், தன் சொந்தத் தாயைக் காணத் துடிக்கின்றது. முறையான ஆவணங்கள் தன்னிடம் இல்லை என, தன் வளர்ப்புத் தாய் கூறினாலும், பழைய கால புகைப்படங்களை ஓரளவு திரட்டி, நம்பிக்கையுடன், தன் வளர்ப்புத் தந்தையின் உதவியுடன், இலங்கைச் சென்ற சாரா, பெரும் முயற்சிக்குப் பின், புகைப்படத்தில் தன் தாய் என எண்ணியிருந்த பெண்ணைச் சந்தித்தார். தான் குழந்தையாக தத்து எடுக்கப்பட்டபோது பதிவுசெய்யப்பட்ட புகைப்படம் இதற்கு உதவியது. தன் தாயைப் பார்த்தவுடன், அழுதார் சாரா. குழந்தையை தன் வளர்ப்புப் பெற்றோரிடம் கையளித்த பெண் அவர்தான் என்றாலும், அவரைப் பெற்ற தாய் அவரல்ல என்பது, மரபணு சோதனையில் தெரியவந்தது. தன் தாயைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்தார் சாரா.  ஆனால், அதோடு அவர் விட்டுவிடவில்லை. இன்று, சாரா அவர்கள், இலங்கையில் பிள்ளைகள் திருடப்பட்ட தாய்மாருக்கு உதவிவருகிறார். குழந்தைகளை ஒரு காலத்தில் தத்து கொடுத்துவிட்டு அக்குழந்தைகளை தற்போது காணத்துடிக்கும் பெற்றோருக்கும், தங்கள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வளர்ப்புத் தாயிடம் வளரும் குழந்தைகளுக்கும் பல்வேறு வகைகளில் உதவி வருகிறார், மூன்று பிள்ளைகளைப் பெற்றுள்ள சாரா. உண்மை பெற்றோரை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தையும், அது தரும் வலியையும் உணர்ந்துள்ளதால்தான் தான் இந்த உதவி முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறுகிறார் சாரா.

நவம்பர் 14. இந்தியாவில் குழந்தைகள் தினம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2018, 15:12