தேடுதல்

கண் நலம் காப்பது அவசியம் கண் நலம் காப்பது அவசியம் 

இமயமாகும் இளமை : கண் மருத்துவத்தில் சாதனை புரிந்த தமிழர்

ஏழை நோயாளிகளுக்கு பார்வை அளிப்பதை, தெய்வத் திருத்தொண்டாக மேற்கொண்ட, கோவிந்தப்ப வெங்கடசாமி என்ற டாக்டர் ஜி. வெங்கடசாமி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

எட்டையபுரம் அருகே உள்ள வடமலாபுரத்தில், ஒரு சாதாரண விவசாயியின் மகனாக,  1918, அக்டோபர் 1ம் தேதி பிறந்தவர், கோவிந்தப்ப வெங்கடசாமி என்ற டாக்டர் ஜி. வெங்கடசாமி.  மருத்துவ வசதி இல்லாத அந்த கிராமத்தில், அக்கம் பக்கத்து வீடுகளில் திடீர் திடீர் என்று இளம் தாய்மார்கள் பிரசவ நேரத்தில் எழுப்பும் மரண ஓலம், சிறுவனாக இருந்த வெங்கடசாமிக்கு, மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டியது.

மகப்பேறு மருத்துவக் கல்வி பயின்ற இவரை, முடக்குவாதம் தாக்கியது. இது இவரது கைவிரல்களைக் கடுமையாக பாதித்தது. பேனாகூட பிடிக்க முடியாத நிலை. ஓரளவு குணமடைந்து எழுந்த இவரிடம், ஒரு நண்பர், இந்தக் கைகளை வைத்துக்கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே, கண் மருத்துவம் பயிலும்படி ஆலோசனை கூறினார். கண் மருத்துவத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் எம்.எஸ். பட்டமும் பெற்றார், ஜி. வெங்கடசாமி.

தன் வாழ்நாளில் ஒரு இலட்சம் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார் அவர். பணி ஓய்வு பெற்ற பிறகு தன் ஆன்மிக குரு ஸ்ரீ அரவிந்தரின் பெயரில், அரவிந்த் ஐ கிளினிக் என்ற 11 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை மதுரையில் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். ஏழை நோயாளிகளுக்கு பார்வை அளிப்பதை தெய்வத் திருத்தொண்டாக மேற்கொண்ட ஜி.வெங்கடசாமி அவர்கள், 2006ம் ஆண்டு, தனது 87ம் வயதில் காலமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2018, 15:25