தேடுதல்

விழிப்புணர்வூட்டும் மாணவர்கள் விழிப்புணர்வூட்டும் மாணவர்கள் 

இமயமாகும் இளமை...: 24,000 பேருக்கு தமிழ் கல்வி - அசத்திய இளையோர்

தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவதற்கு தகுந்த ஒரே வழி, அடிப்படை மொழி அறிவை உயர்த்துவதே, என்பதை உணர்ந்த இளையோர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தமிழ் தெரிந்தால் போதும், ஒரு மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த முடியும் என்று கூறுகின்றனர், Pride குழுவினர். திருவண்ணாமலையில் சில இளையோர் சேர்ந்து, சமூகத்திற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்  என்ற சிந்தனையில் பல சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். Pride குழுவைச் சேர்ந்த இவர்கள், இங்கு மாணவர் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவதற்கு தகுந்த ஒரே வழி, அடிப்படை மொழி அறிவை உயர்த்துவதே, என்பதை உணர்ந்தனர். அவ்வேளையில் அங்கு பொறுப்பில் இருந்த உயர் கல்வி அதிகாரி ஒருவரது பணி, அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவரது ஒத்துழைப்போடு, தங்கள் பணிகளைத் துவக்கினர் இவ்விளையோர். தாய் மொழியான தமிழை கற்றுக் கொண்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து, இதுவரை பயிற்சி ஆசிரியர் வழியாக, 24,000 அரசு பள்ளி குழந்தைகளுக்கு, Pride குழுவினரால் இலவசமாக தமிழ் கற்பிக்கப்பட்டது. இதன் வழியாக, பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். நல்ல தமிழும் கற்றுள்ளனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2018, 15:31