சீன நாட்டு மருத்துவ கப்பல் சீன நாட்டு மருத்துவ கப்பல் 

இமயமாகும் இளமை: எல்லாரும் திருடர் என்பது, நம்மையும் உள்ளடக்கும்

எல்லாரும் தன்னைப்போல், கோழியை, திருடித்தான் சாப்பிடுகிறார்கள் என தனக்குத்தானே நியாயம் சொல்லிக்கொண்டதாம் நரி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருள்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் வியாபாரிக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும், நல்லஉயரமாகவும், கருகருவென்று இருந்தார். வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம், இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார். பெட்டகக் காப்பாளர் சொன்னார், பரவாயில்லை, கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று, உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும், சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி, அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்'' என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2018, 15:02