தேடுதல்

Vatican News
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் சிறார் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் சிறார்  (ANSA)

5 வயதுக்குட்பட்ட சிறாரில் ஐந்து வினாடிக்கு ஒருவர் மரணம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், 2030ம் ஆண்டுக்குள் 5 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் இறக்கக்கூடும் – ஐ.நா.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் 15 வயதுக்குட்பட்ட சிறாரில் ஒவ்வொரு ஐந்து வினாடிக்கு ஒருவர் இறக்கின்றனர் என்றும், கடந்த 2017ம் ஆண்டில் 63 இலட்சம் சிறார் இறந்துள்ளனர் என்றும், இந்த இறப்புகள் தடுக்கவல்ல நோய்களால் இடம்பெறுகின்றன என்றும் ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த இறப்புகளில் ஏறத்தாழ 54 இலட்சம் சிறார், ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறும், ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு, உலக நலவாழ்வு நிறுவனம், மக்கள்தொகை கட்டுப்பாடு அமைப்பு மற்றும் உலக வங்கி குழுக்கள், 2017ம் ஆண்டில் 25 இலட்சம் குழந்தைகள், பிறந்த முதல் மாதத்திலேயே இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்புக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறையே முக்கிய காரணம் எனவும், உலகில் இருபது கோடிச் சிறார் சத்துணவு கிடைக்காமல் துன்புறுகின்றனர் எனவும், ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.

உலக அளவில், 13க்கும் 15 வயதுக்கும் உட்பட்ட சிறாரில், மூவருக்கு ஒருவர் குண்டுகளுக்குப் பலியாகின்றனர் எனவும், அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

20 November 2018, 15:02