வசதியற்றவரும் வசதியுள்ளவரும் வசதியற்றவரும் வசதியுள்ளவரும் 

இமயமாகும் இளமை : புகழ் மயக்கம் ஆபத்தானது

புகழ்தரும் செயல்களைச் செய்தால் வானுலகமே போற்றும். ஏழைகளுக்கு வேண்டியதை அளிக்கும்போது புகழ் பெருகும்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு சமயம், செல்வந்தர் ஒருவரும், அறிவாளி ஒருவரும், எதார்த்தமாக சந்திக்க நேர்ந்தது. ஆனால் அறிவாளியிடம் வறுமையின் அடையாளம் தெரிந்தது. தன்னை யாராவது புகழமாட்டார்களா? என செல்வந்தர் பல நாள்கள் ஏங்கினார். இந்த ஏழை அறிவாளியைக் கண்டதும், சரி, இந்த ஏழையிடம் காசு கொடுத்தாவது நம்மைப் புகழச் சொல்வோம் என்று நினைத்தார். அதனால் அந்த ஏழையிடம், இங்கே பாரு.. என்கிட்டே ஆயிரம் பொற்காசுகள் இருக்கு.. அதுலே ஒரு நூறு பொற்காசுகளைத் தர்றேன், நீ என்னை கொஞ்சம் புகழ்ந்து பேசணும் என்றார். அதற்கு அந்த அறிவாளி, ஐயா, இது நேர்மையான பங்கீடு இல்லை. அதனால் நான் உங்களைப் புகழ்ந்து பேச மாட்டேன் என்றார். அப்படியா சொல்றா, சரி, ஆளுக்குப் பாதியா எடுத்துக்குவோம் என்றார் செல்வந்தர். இப்போது அறிவாளி சொன்னார், ஐயா, உங்களிடமும் 500, என்னிடமும் 500 என்றால், இருவரும் சமம் என்றுதானே அர்த்தம். அப்படியிருக்கும்போது, எனக்குச் சமமாக இருக்கின்ற உங்களை நான் எப்படி புகழ்ந்து பேச முடியும்? என்று. பணக்காரருக்கு ஆசைவிடவில்லை. சரி, என்கிட்டே இருக்கிற ஆயிரம் பொற்காசுகள் அனைத்தையும் உன்கிட்ட தந்துடுறேன், அப்பவாவது என்னைப் புகழ்ந்து பேசுவியா? என்று கேட்டார், செல்வந்தர். இப்போது அந்த அறிவாளி ஏழை சொன்னார், ஐயா, பணக்காரரே, உங்களிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துவிட்டால், நான் செல்வந்தனாகிவிடுவேன், நீங்கள் ஏழையாகிவிடுவீர்கள். ஏழை இல்லாத நான் உங்களை எப்படி புகழ்ந்து பேசுவேன் என்று. இப்போது பணக்காரர், கையில் ஒன்றுமே இல்லாதவனைப் பார்த்து புகழ்ந்து என்ன பயன் எனச் சிந்தித்தார். (தென்கச்சி சுவாமிநாதன்)

புகழுக்கு மயங்காதவர் யார்? ஆனால் புகழ்தரும் செயல்களைச் செய்தால் வானுலகமே போற்றும். ஏழைகளுக்கு வேண்டியதை அளிக்கும்போது புகழ் பெருகும்.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2018, 15:38