தேடுதல்

IDLIB பகுதியில் பாதுகாப்பின்றி விடப்பட்டுள்ள சிறார் IDLIB பகுதியில் பாதுகாப்பின்றி விடப்பட்டுள்ள சிறார் 

சிரியாவில் ஆபத்தை எதிர்நோக்கும் குழந்தைகள்

தாக்குதலுக்கு குழந்தைகள் உள்ளாவதையோ, மக்கள் இடம்விட்டு இடம்பெயர கட்டாயப்படுத்தப்படுவதையோ கை கட்டி வேடிக்கைப் பார்க்க முடியாது, யுனிசெஃப்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியாவின் Idlib பகுதியில் புரட்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த அரசு துருப்புக்கள் திட்டமிட்டுள்ள வேளையில், இதனால் அப்பகுதியின் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் யுனிசெஃப் அமைப்பின் இத்தாலியப் பிரதிநிதி.

அரசு துருப்புக்களின் தாக்குதலுக்கு உள்ளாக இருக்கும் Idlib பகுதியில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் கவலையை வெளியிட்டார், யுனிசெஃப் அமைப்பின் அந்த்ரேயா இயாக்கோமினி.

மோதல்களுக்கு எவ்விதத்திலும் காரணமாகாத இக்குழந்தைகள் மீது இரக்கம் காட்டப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள இயாக்கோமினி அவர்கள்,  ஏற்கனவே பல இடங்களில் மோதல்களைச் சந்தித்து, தற்போது Idlib பகுதியில் அடைக்கலம் தேடியுள்ள குழ்ந்தைகளுக்கு வேறு புகலிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Idlib மாவட்டத்தில் 30 இலட்சம் மக்கள் தற்போது வாழ்ந்து வருவதாகவும், இதில் மூன்றில் ஒரு  பகுதியினர் அப்பாவி குழந்தைகள் எனவும் கூறி, இவர்களின் உயிர்கள் என்ன விலை கொடுத்தாகிலும் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் கூறினார் இயாக்கோமினி.

வரும் நாட்களில் Idlib பகுதியிலிருந்து 8 இலட்சம் மக்கள் வெளியேறும் ஆபத்து இருப்பதாகவும்,  இதனை வெறுமனே கை கட்டி பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது எனவும், மேலும் கூறினார், யுனிசெஃப் அமைப்பின் இயாக்கோமினி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2018, 16:33