தேடுதல்

மனித உரிமைகள் குறித்து இலங்கையில் நடைபெறும் கூட்டம் மனித உரிமைகள் குறித்து இலங்கையில் நடைபெறும் கூட்டம் 

தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் உரிமைப் போராட்டம்

இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னர், தென் இந்தியாவிலிருந்து மக்கள் முதலில் அழைத்துச் செல்லப்பட்டனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களின் நில உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர் என, யூக்கா செய்தி கூறுகின்றது.

இலங்கையில், இப்பிரச்சனை, நூறு ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும்வேளை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கொழும்புவில், அந்தத் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தி, பேரணிகளை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னர், தென்னிந்தியாவிலிருந்து முதலில் அழைத்துச் செல்லப்பட்ட இம்மக்களில் பலர், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாயினர்.

சிறுத்தைகள் போன்ற காட்டு விலங்குகளாலும், நிலச்சரிவுகளாலும் தாக்கப்படும் அச்சுறுத்தல்கள், பாலியல் கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்கள் மற்றும் இன்னல்களுக்கு மத்தியில், தாங்கள் வேலை செய்யவேண்டிய சூழல் இருந்ததென, ஒரு தொழிலாளர் கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள், பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்றும் செய்திகள் கூறுகின்றன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2018, 15:06