போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் அடக்குதல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் அடக்குதல் 

இமயமாகும் இளமை - 'மதம்' பிடித்த இளையோர்

அரசியல்வாதிகளும், சுயநலம் மிக்க மதத்தலைவர்களும் மதத்தை ஓர் ஆயுதமாக மாற்றி, அதை அழிவிற்குப் பயன்படுத்த, அனைவரையும், குறிப்பாக, இளையோரை, தூண்டி வருகின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மதப்பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக அவரைத் துரத்திச் செல்கிறார். இருவரும் குதிரையில் ஏறி, பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில், நண்பகல் வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர், அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய செபங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர், மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு, தன் எதிரியைத் துரத்திச் செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா? சாபமா? தெரியவில்லை.

மதத்தின் சடங்குகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதில் நாம் காட்டும் ஆர்வம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து பின்பற்றுவதில் காணாமல் போய்விடுகிறது. இத்தகைய 'குருட்டு' ஆர்வத்தை தவறாகத் தூண்டிவிட்டு, அரசியல்வாதிகளும், சுயநலம் மிக்க மதத்தலைவர்களும் மதத்தை ஓர் ஆயுதமாக மாற்றி, அதை அழிவிற்குப் பயன்படுத்த, அனைவரையும், குறிப்பாக, இளையோரை, தூண்டி வருகின்றனர் என்பது, நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உண்மை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2018, 13:47