தேடுதல்

பிரான்சில் வீடற்ற ஏழை பிரான்சில் வீடற்ற ஏழை 

உண்ண உணவின்றி மக்கள் உயிரிழக்கும் அபாயம்

மோதல்களாலும், போதிய உணவின்மையாலும், நோய்களாலும் மடியும் வடகிழக்கு நைஜீரிய மக்களைக் காப்பாற்ற Christian Aid அமைப்பு விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உடனடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் நைஜீரியாவில் 40 இலட்சம் பேர் போதிய உணவின்றி மடியும் ஆபத்து உள்ளது என, Christian Aid என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, கவலையை வெளியிட்டுள்ளது.

ஒன்பது ஆண்டுகளாக ஆயுத மோதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் வடகிழக்கு  நைஜீரியாவில் வாழும் மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கான நிதியுதவியில் 50 விழுக்காடு இதுவரை கிட்டியுள்ளதாகவும், ஏற்கனவே ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், இப்பகுதியில் சத்துணவின்மையால் வாடுவதாகவும் தெரிவிக்கிறது Christian Aid அமைப்பு.

உள்நாட்டுப் போர்களாலும், நோய்களின் தாக்குதல்களாலும் நைஜீரியா, சாட், நிஜர், மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகியவை, பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைக்கும் இந்த அமைப்பு, நாட்டிற்குள் திரும்பும் புலம்பெயர்ந்தோர், தங்க இடம் இல்லாமல் தவிப்பதும் தொடர்கின்றது என்று கூறுகின்றது.

நைஜீரியாவிற்குள்ளேயே 28 இலட்சம் மக்கள், புலம் பெயர்ந்தவர்களாக வாழ்வதாகவும் கூறும் Christian Aid அமைப்பு, இவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கும், போரிடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், அரசு முனைந்து செயல்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2018, 15:32