அரேபிய பாலை நிலம் அரேபிய பாலை நிலம் 

உலகம் வெப்பமடைதலின் ஆபத்துக்கள்

மத்திய கிழக்கிலும், வட ஆப்ரிக்காவிலும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, அப்பகுதியின் அரசியல் நிலையற்றதன்மை மற்றும், வேலைவாய்ப்பின்மை பிரச்சனையைவிட கடுமையாய் இருக்கும் - உலக வங்கி

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த கொள்கைகள் செயல்படுத்தப்படவில்லையெனில், உலகளாவிய காலநிலை மாற்றம், மத்திய கிழக்குப் பகுதியை, பாலைவனமாக மாற்றிவிடும் என்று, அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாள், செப்டம்பர் 1, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து, அறிவியலாளர்களின் எச்சரிப்பை வெளியிட்டுள்ள ஆசிய செய்தி நிறுவனம், நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் இடம்பெறவில்லையெனில், 2035ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலை, 2 டிகிரி செல்சியுஸ் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

உலக அளவில் அதிகரித்துவரும் வெப்பநிலை, வறட்சி, வெள்ளம், இயற்கைப் பேரிடர்கள், அறுவடை பாதிப்பு போன்றவைகளை அதிகரித்து வருகின்றது என்றும், அதனால், புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை, ஏராளமான உணவுப்பொருட்கள் இழக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கார்பன்டை ஆக்ஸைடின் அளவு தொடர்ந்து அதிகரித்துவந்தால், இந்தியாவில் மட்டும்,  ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள், துத்தநாகம் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டு, குடல் நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும், 3 கோடியே 80 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள், புரோட்டீன் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்றும், அண்மை ஆய்வுகள் கூறுகின்றன. (AsiaNews)

அண்மையில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, மத்திய கிழக்கிலும், வட ஆப்ரிக்காவிலும் இடம்பெற்றுள்ள தண்ணீர் பற்றாக்குறை, அப்பகுதியின் அரசியல் நிலையற்றதன்மை மற்றும், வேலைவாய்ப்பின்மை பிரச்சனையைவிட கடுமையாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2018, 14:53