தேடுதல்

கணனி பயன்பாடு கணனி பயன்பாடு 

மூளை வளர்ச்சி குன்றிய இளைஞரின் சாதனை

மூளை வளர்ச்சி குன்றிய இளைஞர் கம்ப்யூட்டரில் அனைத்துலக தரத்தில் ஓவியம் வரைந்து கிராபிக்ஸ் செய்து சாதனை படைக்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

அவர் பெயர் சாமுவேல், மிசோராம் மாநிலத்தை சேர்ந்தவர். இவரால் நடக்க முடியாது, தன் உடலை அசைக்க முடியாது. தனக்கான எந்த வேலையையும் அவரால் செய்ய முடியாது. இவரது வலது கையை எடுத்து கணனி மவுஸ் மீது வைத்தால் போதும் தனது கையை மெல்ல மெல்ல அசைத்து கணனியில் புதிய உலகை படைக்கிறார். பெங்களூருவில் செயல்படும் சிபிஆர் நிறுவனம், இவரை ஊக்கப்படுத்தி உள்ளிருக்கும் திறமையை வெளிக்கொணர உதவியுள்ளது. பெங்களூருவில் நடந்த விழாவில் இவருக்கு லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சிபிஆர் நிறுவன நிர்வாக இயக்குனர் நிக்கோலஸ் ஆகியோர், சாமர்த்தியா என்ற விருதையும், 15 ஆயிரம் ரூபாய் நிதியையும் வழங்கி கௌரவித்தனர். இதேபோல் 15 மாற்று திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

உடலில் குறை இருந்தாலும், உள்ளம் உறுதியாக இருந்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு, சாமுவேல் நல்லதோர் எடுத்துக்காட்டு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2018, 15:19