உலக தண்ணீர் வாரம் உலக தண்ணீர் வாரம் 

உலக தண்ணீர் வார கலந்துரையாடலில் WCC

Stockholm நகரில், ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை, “தண்ணீர், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித முன்னேற்றம்” என்ற தலைப்பில், உலக தண்ணீர் வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சுவீடன் நாட்டில், இம்மாத இறுதியில் கடைப்பிடிக்கப்படும் உலக தண்ணீர் வாரத்தின் ஒரு பகுதியாக, “தண்ணீரும் விசுவாசமும்” என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சமயக் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் இந்நிகழ்வை, Stockholm உலக தண்ணீர் நிறுவனம், உலக கிரிஸ்தவ சபைகள் மன்றம் (WCC), சுவீடன் கிறிஸ்தவ சபை, சுவீடன் அலெக்சாந்திரியா நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் கிறிஸ்தவ சபைகளும், சமய நிறுவனங்களும், எல்லாருக்கும் தண்ணீர் கிடைப்பதற்கு, ஐ.நா.வோடு இணைந்து செயலாற்றும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.     

Stockholm உலக தண்ணீர் வார நிகழ்வில், 135 நாடுகளிலிருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வதற்குப் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2018, 15:30