சிரியாவில் யுனிசெப் பணியாளர் சிரியாவில் யுனிசெப் பணியாளர் 

பள்ளிகளில் சுகாதார வசதிகளின்றி 60 கோடி சிறார்

உலக தண்ணீர் வாரம் : இன்றைய கல்விக்கூடங்களின் அடிப்படை வசதிகளின்மைக் குறித்து ஐ.நா.வின் அறிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இன்றைய உலகில் ஏறத்தாழ 60 கோடி குழந்தைகள், கல்விக்கூடங்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லா நிலையை எதிர்நோக்கியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.

இவ்வாரத்தை உலக தண்ணீர் வாரமாக அறிவித்து உலகம் சிறப்பித்து வருவதை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி நிறுவனம் யுனிசெஃப், 2016ம் ஆண்டில் உலகில் ஏறத்தாழ 60 கோடி குழந்தைகள், தங்கள் கல்விக் கூடங்களில் அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லா நிலையை எதிர்நோக்கின, என உரைத்துள்ளது.

இன்று உலகில் 69 விழுக்காட்டுப் பள்ளிகளிலேயே அடிப்படை குடிநீர் வசதிகள் உள்ளன என்றும், சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள், கைகழுவும் சவக்காரம் போன்றவைகள் இருக்கும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், நேர்மறை குணங்களை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் கூறுகிறது யுனிசெஃப், மற்றும், WHO எனும் உலக நல வாழ்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை.

ஏழ்மையிலிருந்து விடுதலைப் பெறவும், நல ஆதரவுப் பணிகளைப் பெறவும் உதவக்கூடிய கல்வியை வழங்கும் கல்விக்கூடங்களே, குறைபாடுகளுடன் செயல்படுவது மாணவர்களின் நம்பிக்கைகளை பாதிக்கும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2018, 15:51