தேடுதல்

Vatican News
குண்டு வீச்சு தாக்குதலுக்குப்பின் சிரியாவின்  IDLIB  நகரம் குண்டு வீச்சு தாக்குதலுக்குப்பின் சிரியாவின் IDLIB நகரம்  (ANSA)

3,50,000 சிரியா சிறார்க்கு போகுமிடம் தெரியவில்லை

சிரியாவில் நடந்துகொண்டிருப்பது என்னவென்று எங்களால் விவரிக்க முடியவில்லை என, பன்னாட்டு சமுதாயத்திடம் கூறியுள்ளனர், சிரியா நாட்டுச் சிறார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பல ஆண்டுகளாக தொடர்ந்து சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில், பத்து இலட்சத்திற்கும் அதிகமான சிறார், போரினால் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர் மற்றும், வருங்காலத்தின் நிச்சயமற்ற நிலைமை குறித்து அஞ்சியுள்ளனர் என்று, யுனிசெப் அமைப்பு கூறியது.

ஐ.நா.வின், யுனிசெப் சிறார் நல அமைப்பிடம் பேசிய, சிரியா நாட்டுச் சிறார், அந்நாட்டில் போரிடும் குழுக்கள் மற்றும் அவற்றின் மீது அரசியல்முறைப்படி அதிகாரம் உள்ளவர்கள், சிறாரின் துன்பங்களைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசியல் ஆதாயம், இராணுவ நடவடிக்கைகள் போன்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி, சிறாரின் வருங்காலம் குறித்து சிந்திக்குமாறும், சிரியாவின் வருங்காலம், சிறாரைச் சார்ந்துள்ளது என்பதை உணருமாறும், அழைப்பு விடுத்துள்ளனர், சிரியாச் சிறார்.

Idlib நகரில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், 3,50,000 சிறார், எங்கே போவது எனத் தெரியாமல் திகைக்கின்றனர் என்று, யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது. (UN)

11 August 2018, 15:05