ROHINGYA அகதிகள் ROHINGYA அகதிகள் 

Rohingya புலம்பெயர்ந்த சிறாரின் நிலைமை

2017ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மியான்மார் இராணுவம் Rakhine மாநிலத்தில் மீண்டும் ஆரம்பித்த தாக்குதலில், கடும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

பங்களாதேஷ் நாட்டிற்கு பெற்றோரின்றிச் சென்ற Rohingya புலம்பெயர்ந்த சிறாரில், இருவருக்கு ஒருவர் வீதம், உறவுகளின்றி வாழ்ந்து வருகின்றனர் என, Save the Children  அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.

மியான்மாரில், இராணுவத்திற்கும், Rohingya இனப் புரட்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை தொடங்கியதால், அந்த இன மக்கள் புலம்பெயரத் தொடங்கியதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட Save the Children  அமைப்பு,  பங்களாதேஷ்  நாட்டின் Cox’s Bazar முகாமில் வாழ்கின்ற Rohingya சிறாரில், ஆறாயிரத்துக்கும் அதிகமானோர், எத்துணையுமின்றி தனியாக வாழ்கின்றனர் என்று எச்சரித்துள்ளது.

மியான்மார் இராணுவம் ஓராண்டிற்கு முன் தொடங்கிய, Rohingya இனத்தவர்க்கெதிரான  கடும் வன்முறையினால், பங்களாதேஷ் முகாம்களில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த சிறாரில் எழுபது விழுக்காட்டினரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது, Save the Children  அமைப்பு.

பங்களாதேஷிலுள்ள ஏறக்குறைய ஐந்து இலட்சம் சிறாரில் ஏராளமானோர், தங்கள் பெற்றோர் கொல்லப்பட்ட பின் அல்லது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, பங்களாதேஷ் வந்தவர்கள் எனவும், அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2018, 15:32