தேடுதல்

சீனாவில் கிறிஸ்தவர்கள் சீனாவில் கிறிஸ்தவர்கள் 

ஆசியாவில் மதச் சுதந்திரம் வெகுவாக குலைந்து வருகிறது

சிறுபான்மையினரை சகித்துக்கொள்வது மட்டும் போதாது, அவர்களையும், சமுதாயத்தின் முக்கிய உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும் - ஐ.நா. உயர் அதிகாரி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆசியாவின் பல நாடுகளில் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், குறிப்பாக, மதச் சுதந்திரம் வெகுவாக குலைந்து வருகிறது என்றும், ஐ.நா.வின் மதச் சுதந்திரக் குழுவின் சிறப்புப் பிரதிநிதி கூறினார்.

ஆசியாவில் மதச் சுதந்திரம் என்ற மையக்கருத்துடன், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய ஐ.நா. அதிகாரி, அகமத் ஷாஹீத் அவர்கள், மனித உரிமைகள் மதிக்கப்படாத நாடுகளில், மதச் சுதந்திரமும் மதிக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

ஆசியாவில், சீனா, வியட்நாம், மியான்மார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அண்மைய ஆண்டுகளில், மதச் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்நாடுகளில், சிறுபான்மையினர் பெரும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும், ஷாஹீத் அவர்கள் எடுத்துரைத்தார்.

இன்னும் பல ஆசிய நாடுகளில், வெளிப்படையான மத வன்முறைகள் இல்லையெனினும், மறைமுகமான தாக்குதல்கள் நிகழ்கின்றன என்றும், அடிப்படைவாத அமைப்புக்கள் பெருமளவு வளர்ந்துள்ளன என்றும், ஐ.நா. அதிகாரி ஷாஹீத் அவர்கள் கவலையுடன் எடுத்துரைத்தார்.

சிறுபான்மையினரை சகித்துக்கொள்வது மட்டும் போதாது, அவர்களையும், சமுதாயத்தின் முக்கிய உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஷாஹீத் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2018, 15:04