தேடுதல்

அடிமை வர்த்தகத்தை நினைவுறுத்தும் முள்வேலி அடிமை வர்த்தகத்தை நினைவுறுத்தும் முள்வேலி 

நவீன அடிமைமுறைகள் அகற்றப்பட அழைப்பு

அடிமை வர்த்தகம் மற்றும் அது ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் இருபதாவது உலக நாள், இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உலகில் இடம்பெறும் எல்லாவிதமான நவீன அடிமைமுறைகள் ஒழிக்கப்படுமாறு, ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்ரிக்க வழிமரபினர்க்கெதிரான பாகுபாடுகள், இன்றும், ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்றவேளை, வரலாற்றில் நடத்தப்பட்ட ஆப்ரிக்க அடிமை வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளது, யுனெஸ்கோ.

அடிமை வர்த்தகம் மற்றும் அது ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் உலக நாள், ஆகஸ்ட் 23, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள, யுனெஸ்கோ இயக்குனர் Audrey Azoulay அவர்கள், நவீன அடிமைமுறைகள் அகற்றப்பட,  உலகின் அனைத்து நிலையினரும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22 மற்றும் 23ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், சான் தொமிங்கோவின் மேற்குப் பகுதியில், அதாவது, தற்போதைய ஹெய்ட்டி மற்றும்  சான் தொமிங்கோ குடியரசுகளில், அடிமை வர்த்தகத்திற்கெதிராக கிளர்ச்சி எழுந்ததையடுத்து, இந்த வர்த்தகம் ஒழிக்கப்பட்டது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார் Azoulay. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2018, 15:32