இந்திய  சுதந்திர தினத்தில் இராணுவம் இந்திய சுதந்திர தினத்தில் இராணுவம் 

இமயமாகும் இளமை : விடுதலை எம் பிறப்புரிமை

கையில் பகவத் கீதையுடனும், வந்தே மாதரம் முழக்கத்துடனும், மிகவும் விறைப்பாகவும் மகிழ்ச்சியோடும் சிரித்தவாறே தூக்கு மேடை ஏறினார், 18 வயது நிரம்பிய விடுதலைப் போராட்ட மாவீரர் போஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் கிராமத்தில் பிறந்தவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மிகவும் இளம் வயதில் நாட்டு விடுதலைக்காகத் தூக்கு மேடையில் உயிர் நீத்த தியாகியுமான குதிராம் போஸ்.

இவர், சிறு வயதிலேயே நாட்டு விடுதலைக்காகத் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதிபூண்டார். ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தார். 16வது வயதில் யுகாந்தர் என்ற விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். காலரா, மலேரியா நோய் கண்ட மக்களுக்கும் இந்த இயக்கம் சேவை செய்தது.

விடுதலைப்போராட்டத்தின்போது, பல காவல் நிலையங்களை குதிராமின் குழுவினர், குண்டுகளால் தாக்கினர். ஆங்கிலேயே அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் நாட்டின் பல்வேறு இடங்களில் பிரித்தானிய அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடத்தினர்.

1908ம் ஆண்டு, விடுதலை வீரர்களுக்குக்கு கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த நீதிபதி கிங்ஸ்போர்டை வஞ்சம் தீர்க்க முடிவுசெய்யப்பட்டது. அவரது வாகனம் மீது குதிராம் போசும், அவரது நண்பர் சாஹியும் குண்டு வீசினர். அந்த வாகனத்தில் கிங்ஸ்போர்டு வரவில்லை. ஆனால் அதில் பயணம் செய்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர்.  இறுதியில் குதிராம் போஸ் பிடிபட்டார். அதிகாரிகளிடம், தான் குண்டு வீசிய காரணத்தைக் கூறியதோடு, கிங்ஸ்போர்டின் குடும்பத்தினர் இறந்தது குறித்து வருத்தமும் தெரிவித்தார். விசாரணை நடைபெற்றது. தேச துரோக குற்றத்துக்காக இவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் இந்த இளைஞர் சிரித்தார்.

1908-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு வயது 18. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2018, 16:22