தேடுதல்

ஹெல்வன் பல்கலைக்கழக மாணவர்களின் காற்றில் இயங்கும் கார் ஹெல்வன் பல்கலைக்கழக மாணவர்களின் காற்றில் இயங்கும் கார் 

இமயமாகும் இளமை – காற்றில் இயங்கும் கார்

எகிப்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், காற்றில் இயங்கும் வாகன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, உலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

எகிப்து நாட்டிலுள்ள ஹெல்வன் (Helwan) பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் சிலர், தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, காற்றில் இயங்கும் சிறிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஒருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய இந்தக் கார், ஆக்சிஜன் மூலம் இயங்கும். மேலும், இது, மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்தக் காரில் ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பினால் 30 கி.மீ. துாரம் வரை பயணம் செய்யலாம். இதன் தயாரிப்பு செலவு, ஏறத்தாழ 18 ஆயிரம் எகிப்திய பவுண்டுகள். இந்திய மதிப்புக்கு, ஏறத்தாழ 68,500 ரூபாய். பொதுவாக வாகனங்கள் வாங்க நினைக்கும் பலருக்கு  எரிபொருள் செலவு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் இந்தக் கார், காற்றில் இயங்குவதால், எரிபொருள் செலவு மிச்சமாகிறது. இந்தக் காரைத் தயாரித்த மாணவர்கள் குழு, இந்தக் கண்டுபிடிப்பு பற்றி பேசியபோது, சாதாரணமாக 'கம்ப்ரஸ்டு ஆக்சிஜன் (compressed oxygen) காற்றை' எரிபொருளுக்குப் பயன்படுத்தினால் போதும் எனவும், தாங்கள் வடிவமைத்துள்ள காரை, மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். தங்களின் தயாரிப்பை மேலும் அதிகரிப்பதற்கு, நிதியுதவியை எதிர்பார்ப்பதாகவும், இந்த எகிப்திய மாணவர் குழு தெரிவித்துள்ளது. (தினமலர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2018, 14:24