வியட்னாம் மறைசாட்சிகள் கல்லறைகள் வியட்னாம் மறைசாட்சிகள் கல்லறைகள் 

கல்லறைகளை விவசாய நிலங்களாக மாற்றும் சைனா

விவசாய நிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இறந்த உடல்களை எரிக்க கட்டாயப்படுத்தும் சைன மாநில அரசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்களின் கல்லறைக்கென நிலங்கள் ஒதுக்கப்பட்டு, விவசாய நிலங்களின் எண்ணிக்கைக் குறைவதால், இறந்த உடல்கள் புதைக்கப்படக் கூடாது, மாறாக, எரியூட்டப்பட வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தியுள்ளது, சைனாவின்  Jianxi மாநிலம்.

அடக்கச் சடங்குகள் எதுவும் நிறைவேற்றப்படக் கூடாது என அறிவித்துள்ள அப்பகுதி காவல்துறை, மக்களின் வீடுகளில் புகுந்து, நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகளை கைப்பற்றி, சேதப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஏப்ரல் மாத்தில், எரியூட்டல் சட்டத்தை மதிக்காமல் புதைக்கப்பட்டதாகக் கூறி, கல்லறை ஒன்று தோண்டப்பட்ட நிகழ்வு நடந்துள்ள நிலையில், தற்போது பல நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது மக்களிடையே எதிர்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

தங்கள் கைகளாலேயே சவப்பெட்டிகளைச் செய்து வைத்து காத்திருப்பது, தங்களின் ஆயுளை நீட்டிக்கும் என சைனாவின் Jianxi பகுதி மக்கள் நம்புவதால், ஒவ்வொரு வீட்டிலும் சில சவப்பெட்டிகள் இருக்கும் என்பதை அறிந்துள்ள அதிகாரிகள், தற்போது அவற்றைக் கைப்பற்றி சேதப்படுத்தியுள்ளனர்.

இறந்த உடல்களை எரிக்கும்பட்சத்தில், கல்லறை நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றலாம் என்ற எண்ணத்தில், கல்லறைகளுக்கு தீவிர தடை விதித்து செயல்படுத்தி வருகிறது சைனாவின் Jianxi மாநிலம். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2018, 16:11