தேடுதல்

Vatican News
மியான்மார் Rohingya சிறார் மியான்மார் Rohingya சிறார்  (AFP or licensors)

புலம்பெயர்ந்த சிறாரில் பாதிப்பேருக்கு கல்வியில்லை

2017ம் ஆண்டின் இறுதியில், உலகில், 2 கோடியே 54 இலட்சத்துக்கு அதிகமான புலம்பெயர்ந்தோர் இருந்தனர், இவர்களில் 52 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சிறார் - UNHCR

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற வேண்டிய சிறாரின் எண்ணிக்கை,  உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்வேளை, உலகில் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய புலம்பெயர்ந்த சிறாரில், பாதிக்கும் அதிகமானோர், தற்போது கல்விபெற வசதியின்றி உள்ளனர் என்று, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.

புலம்பெயர்ந்த சிறாரின் கல்விநிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு (UNHCR), போதுமான முதலீடுகள் வழங்கப்படவில்லையெனில், பல்லாயிரக்கணக்கான சிறார், தங்களின் சமூகங்களுக்கு உதவ இயலாத நிலை உருவாகும் என எச்சரித்துள்ளது.

உலகளவில் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய 72 இலட்சம் புலம்பெயர்ந்த சிறாரில், நாற்பது இலட்சம் சிறார், எந்தவிதமான கல்வியையும் பெறவில்லை எனவும், அந்த அமைப்பு கூறியுள்ளது. (UN)

31 August 2018, 15:52