தேடுதல்

உலகில் வெப்பம்  அதிகரிப்பு உலகில் வெப்பம் அதிகரிப்பு 

பருவநிலை மாறுபாட்டால் இந்தியர்களுக்கு ஆபத்து

வெப்பநிலை மாறுதல் என்பது, மெல்ல நிகழும் பேரழிவு, இதுபற்றி நாம் விவாதிக்க வேண்டியது அவசியம் என்று சொல்கிறார், ஆராய்ச்சியாளர் முத்துக்குமார மணி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பருவநிலை மாறுபாடுகளால் வெயில் அதிகரித்து மழை குறைந்துவரும் நிலையில்,  இந்தியாவின் உற்பத்தி விகிதம் 2.8 விழுக்காடு குறைந்து, 2050ம் ஆண்டில், மக்களின் வாழ்க்கை முறையே மாறும் என, உலக வங்கி எச்சரித்துள்ளது.

பருவநிலை மாறுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்படப்போவது மகாராஷ்டிராவின், விதர்பா மாவட்டமே என்றும், ஏறத்தாழ பத்து விழுக்காட்டு அளவு, வரவுசெலவு பட்டியலில்  பாதிப்பு ஏற்படவிருக்கிறது என்றும் உலக வங்கி கூறியுள்ளது.

வெப்பநிலை உயர்வால் இந்தியா மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களிலும் பெய்யும் மழையின் அளவும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாறுபாட்டால் 2050ம் ஆண்டு ஏற்படும் பொருளாதார இழப்பு 1.1 ட்ரில்லியன் டாலர்கள் எனவும், இந்திய மாவட்டங்களில் ஏற்படும் நுகர்வு இழப்பின் மதிப்பு 400 பில்லியன் டாலர்கள் எனவும், சத்தீஸ்கர் மற்றும், மத்திய பிரதேசத்தில், எதிர்காலத்தில் 9 விழுக்காடு பாதிப்பு ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிராவிலுள்ள பத்து மாவட்டங்கள், பருவ மாறுதல் விளைவுகளை, அதிகமாக எதிர்கொள்ளவிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. (தினகரன்)

தெற்காசியாவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு என்ற அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ள, பொருளாதார நிபுணரான, முத்துக்குமார மணி அவர்கள், 2050ம் ஆண்டில், வெப்பநிலை அதிகமாகவுள்ள இடங்களில், ஏறக்குறைய அறுபது கோடி இந்தியர்கள் வாழ்வார்கள் என்றும், இவ்வெண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2018, 15:35