தேடுதல்

கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது 

இமயமாகும் இளமை : சாதனைகளுக்கு வயது ஒரு தடையல்ல

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுவதில் இளையோரின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

15 வயது நிரம்பிய இரு பள்ளி மாணவர்கள், 2014ம் ஆண்டு, 6 வோல்ட் மின்சாரம் உருவாக்கும் ஒரு புது கருவியைக் கண்டுபிடித்தனர். நாம் காலணியுடன் நடப்பதன் வழியாக, அதில் பொருத்தப்பட்ட ஒரு சாதனத்தின் துணைகொண்டு, மின்காந்த முறையில் மின்சாரத்தை உருவாக்கி, நேரடியாக கைப்பேசிகளை சார்ஜ் செய்ய முடியும் வகையில், ஒரு சிறு சாதனத்தைக் கண்டுபிடித்து, அதற்கு "வாக்கி மொபி சார்ஜர்" எனப் பெயரிட்டனர். டெல்லியின் Mount Carmel பள்ளியைச் சேர்ந்த ஆனந்த கங்காதரன், மொஹக் பல்லா என்ற இந்த இரு நண்பர்களும், புதுமையாகச் சிந்திக்க மற்றும் உருவாக்க, தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு வழியாக, மின்சார சேமிப்புக்கும் பங்காற்றியுள்ளனர். உங்கள் வயது எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஆதரவாக உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்களால் சாதிக்க முடியும் என்பதற்கு எந்தவித தடையும் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2018, 15:42