சிரியா போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார் சிரியா போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார் 

சிறார் வர்த்தகத்தில் குடும்பங்களுக்கு பங்கு

மனித வர்த்தகத்தில் இடம்பெறும் கடும் மனித உரிமை மீறல்களை ஒழிக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐ.நா.

மேரி தெரேசா – வத்திக்கான்

சிறார் வர்த்தகத்தில் ஏறத்தாழ பாதிப் பங்கு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ளது என்று ஐ.நா.வின் புலம்பெயர்வோர் அமைப்பு (IOM) கூறியுள்ளது.

மனித வர்த்தகத்திற்கெதிரான உலக நாளையொட்டி, மனித வர்த்தகம் குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தொடர்பாளர் Maria Grazia Giammarinaro அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித வர்த்தகத்தைத் தடை செய்வதற்கு அனைத்து நாடுகளுக்கும் கடமை உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத மோதல்கள், இயற்கைப் பேரிடர், சித்ரவதைகள் அல்லது கடும் வறியநிலை போன்ற காரணங்களால் சமூகப் பாதுகாப்பைத் தேடி புலம்பெயரும் மக்கள் மனித வர்த்தகத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், Giammarinaro அவர்கள் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வுடன் நடந்துகொள்ளும் மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்கள் அமைப்புகளும், பல நாடுகளில் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார், ஐ.நா. அதிகாரி Giammarinaro. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2018, 15:42